ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவுகுறித்த மோடியின் கருத்து வரவேற்க்க தக்கது என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ஜுகல் கிஷோர் ஷர்மா திங்கள் கிழமை கூறுகையில், “”370-ஆவது பிரிவு குறித்து விவாதம்நடத்த தயாரா என்று முதல்வர் ஒமர்அப்துல்லா கேட்டிருந்தார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜ.க.,வின் எந்தத் தலைவருடனும் அவர்விவாதிக்கலாம்” என்றார்.

காஷ்மீரிலிருந்த புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளின் அமைப்பான “பானுன் காஷ்மீர்’ நரேந்திரமோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் அஸ்வினி ச்ருங் கூறுகையில், “”அரசியலமைப்பு சட்டத்தில் 370ஆவது பிரிவைச்சேர்க்கும் விவாதத்தின்போது, அது நிலைத்திருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால்தான் ஜவாஹர்லால் நேரு, “காலப் போக்கில் அந்தப்பிரிவு தானாகவே நீங்கிவிடும்’ என்று தெரிவித்தார். ஒருவகையில் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே இந்தப் பிரிவு பயன் படுகிறது” என்றார்.

Leave a Reply