ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்துதரும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்துசெய்வோம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பாஜக.,வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சானத்தின் 370வது பிரிவை ரத்துசெய்வோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகதொடரும். ஜம்மு, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரேசீரான மேம்பாட்டை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக்குடியேற்றி அவர்களது முழுபாதுகாப்போடு வாழ வழிவகைசெய்வோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துவந்த அகதிகள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்போம். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு தொடர்பான பாஜக.,வின் நிலை தொடர்கிறது. அத்துடன் இதுகுறித்து சம்பந்தப்பட்டோருடன் விவாதித்து அதை ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்வோம். என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply