டெல்லியில் 4 இடங்களை குண்டுவைத்து தகர்க்க  லஷ்கர்இ-தொய்பா  திட்டம குடியரசு தினத்தின் பொது டெல்லியில் 4 இடங்களை குண்டுவைத்து தகர்க்க பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மும்பை தாக்குதல்வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவரவாதி அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்கப்போவதாக லஷ்கர்-இ-தொய்பா மிரட்டியது. இந்த நிலையில் குடியரசு தினத்தன்று அந்த அமைப்பு தெற்குடெல்லியில் உள்ள கோவில், சாந்தினி சவுக், காந்திநகர் மார்க்கெட் மற்றும் ஒரு மெட்ரோ ரயில்நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதல்களை அல்கொய்தா மற்றும் தெஹ்ரிக்இ-தாலிபான் உள்ளிட்ட அமைப்புகளுடன் சேர்ந்துநடத்த திட்டமிட்டுள்ளது லஷ்கர்இ-தொய்பா. இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

காவல் துறையினர் சாதாரண உடை அணிந்து ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த_தாக்குதலை நடத்தவுள்ள தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்து விட்டதாகவும், இந்தியன்முஜாஹிதீன் உதவியுடன் வெடிபொருட்கள் டெல்லிக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply