அரக்கு மாளிகை சம்பவத்துக்குப் பின்னர் பாண்டவர் தப்பித்தது பற்றிப் பின்னால் அறிந்த துரியோதனன் அது போன்று அவர்களைத் தப்பிக்க வைத்தது விதுரரைப் போன்ற ஒருவரால்தான் முடியும் என்று கருதி அவர் மேல் சந்தேகமும் கோபமும் கொண்டான்!!! பின்னர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் மேல் தனது காழ்ப்புணர்ச்சியையும் ஆத்திரத்தையும் காட்டி வந்தான்!!!

அதன் பின்னரும் நடந்த போர்க்கலைகள் பற்றிய விழாவில் கர்ணனைப் பற்றிய பிரச்சினை வந்த போதும் விதுரர் திருத ராஷ்டிரனிடம் துரியோதனன் செயல் தவறு என்றே எடுத்துச் சொன்னார்!! ஆனால் அந்தக் குருட்டு மன்னனால் இயலாமையினாலும் பிள்ளைப் பாசத்தாலும் மகனைக் கண்டிக்க முடியாமலேயே இருந்து வந்தான்!!!

பாஞ்சாலி துகிலுரியப்பட்ட நேரத்தில் பல நூறு பேர் கூடியிருந்த அந்தப் பெரும் அவையில் அதுபோலத் துகிலுரியும் செயல் அநீதியானது என்று எடுத்துரைத்த ஒரே மனிதன் விதுரன்தான் !!

பின்னர் பாண்டவர்களை வனவாசம் அனுப்பும் நிகழ்விலும் கூட சமரசமாகப் போய் பாண்டவர்களிடம் அவர்களின் நாட்டை ஒப்படைத்து பெருந்தன்மையாக நடப்பது ஒன்றே ஹஸ்தினாபுரத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் என்று அறிவுரை கூறியதும் விதுரன்தான்!!

இதே போலப் பற்பல நிகழ்வுகளிலும் ஹஸ்தினாபுரத்துக்கு எது நல்லதோ ஏன் அப்படிக் கூட வேண்டாம் தர்மம் எதுவோ அதை உரைத்த உண்மையான மந்திரிக்கு உள்ள இலக்கணத்தைக் கொண்டவராக விதுரர் இருந்தார்!!!

நாளாவட்டத்தில் அவர் அறிவுரைகள் துரியோதனுக்கு மட்டுமின்றி திருதராஷ்டிரனுக்கேவும் கசக்க ஆரம்பித்தது!!! பிள்ளைப் பாசம் என்ற ஒன்று கண்ணை மறைக்காமல் இருந்திருந்தால் அது கசந்திருக்காது!! துரியோதனன் மறைமுகமாக '' மகாமந்திரி நீர் யார் உங்கள் லட்சணம் என்ன என்று எண்ணிப் பார்க்கும் போது உமது அறிவுரைகள் எனக்கு வியப்பைத் தரவில்லை!! உம்மால் இப்படித்தான் எனக்கு அறிவுரை வழங்க முடியும் என்பதை நானறிவேன் '' என்று அவர் பிறப்பைப் பற்றி மறைமுகமாகக் கூறி இடித்துரைத்தான்!!!

திருதராஷ்டிரனோ இன்னமும் மோசமாக பின்னாட்களில் '' விதுரா நீயென்ன அறிவுரை சொல்லப் போகிறாய் என்பது தெரியாதா? என் மகன் துரியோதனன் செய்வது தவறு என்று சொல்வாய்!!! அவனைக் கண்டிக்காதது என் குற்றம் என்றும் சொல்வாய்!! வர வர நீ எந்த நாட்டின் மந்திரியாக இருந்து பேசுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை!!'' என்று விதுரரின் மனதை நோகடித்தான்!!!

ஆனால் இவ்வாறான இழிசொற்களால் விதுரன் மனம் கலங்கவேயில்லை!!! 'தர்மத்தை' உரைக்கும் பொறுப்பில் உள்ள ஒருவன் இது போன்ற இடித்துரைப்புக்களால் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் தன் பணியை புகழ் கிடைத்தாலும் இகழ் கிடைத்தாலும் அதன் பொருட்டு எந்தக் கவலையுமின்றி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உண்மையை இது காட்டுகிறது!!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply