பதினோராம் அனுவாகம் : ருத்ரனே உங்களின் பலவாறான ஆயிரம் வகையான ஆயுதங்கள் கொண்ட வீரர்களை எங்களிடமிருந்து ஆயிரம் மைல்கள் தள்ளி இருக்க சொல்லுங்கள்!! பிரபஞ்சமுழுதும் இருக்கும் வெளியிலும் உங்கள் வீரர்கள் பரவி உள்ளனர்!! கழுத்தின் ஒரு பக்கம் நீளமாகவும் இன்னொரு பக்கம் வெண்மையாகவும் உள்ள அவர்கள் பூமியின் கீழுள்ள பாதாளத்திலும் உள்ளனர்!! சுவர்க்கத்திலும் அவர்கள் இருக்கின்றனர்!

மரங்களிலும் புதிதாக முளைத்த புல்லின் நிறத்திலும் அவர்கள் நீலக் கழுத்துடனும் சிவந்த உடலுடனும் உள்ளனர்! அவர்கள் படைத் தளபதிகளாக ஜடாமுடியுடனும் முடி இல்லாமலும் இருக்கின்றனர்!! அவர்கள் உயிர்களையும் மக்களையும் துன்புறுத்துபவர்களாகவும் பாத்திரங்களில் இருந்து உணவையும் பானங்களையும் எடுப்பவர்கலாகவும் உள்ளனர்!! அவர்கள் பாதைகளில் நடக்கும் மக்களைக் காப்பவர்களாகவும் வேறு பாதைகளில் நடபவர்களையும் காப்பவர்களாகவும் உள்ளனர்!! உணவு கொடுத்தும் எதிரிகளை அழித்தும் அவர்கள் மக்களைக் காக்கின்றனர்! கூர்முனையுள்ள ஆயுதங்களையும் கத்திகளையும் அவர்கள் கொண்டுள்ளனர்! புனித நீர்நிலைகளைக் காத்தவண்ணம் அவர்கள் சஞ்சரிக்கின்றனர்!! அந்த வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கேயே வையுங்கள்! வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களுடனும் உள்ள அவர்கள் விற்களை நாணிறக்கி வைக்கட்டும்!! பூமியிலும் வானத்திலும் உள்ள அவர்கள் உணவும் நீரும் தரும் அவர்கள் உயிர்களை அழிக்கும் ஆயுதங்களைக் கொண்ட அவர்களை நான் பத்து விரல்களால் வணங்குகிறேன்!! கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு , மேலே நோக்கி அவர்களை வணங்குகிறேன்!! அவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்!! எனக்கு சந்தோஷத்தை அளியுங்கள்!! எனக்கு எதிரியாக இருப்பவரையும் என்னை எதிரியாக நினைப்பவரையும் அவர்களின் திறந்த பெரிய வாய்க்குள் தள்ளி விட வேண்டுகிறேன்!!!!

இந்த சுருக்கம் சிவ வழிபாட்டின் ஸ்ரீருத்ரம் என்கிற வேத மந்திரங்களின் பொருளாகும்!! இந்த மந்திரங்கள் எதைச் சொல்லி நிற்கின்றன என்று அடுத்த பதிவில் விளக்க விழைகிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply