மே 4 .5-ம் தேதிகளில் காங்கிரஷின் ஊழலுக்கு  எதிராக நாடுதழுவிய போராட்டம் ஐ.மு., கூட்டணி அரசின் நிலக்கரிசுரங்கம் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுகீட்டு முறை கேடுகளுக்கு எதிராக நாடுதழுவிய போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ்ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஊழலுக்கு எதிரான பாஜக.,வின் போராட்டத்தை பாராளுமன்றத்தில் இருந்து நாட்டுமக்களிடம் கொண்டுசெல்ல முடிவுசெய்துள்ளது. அனைத்து மாநில தலை நகரங்களிலும் மே 4 .5-ம் தேதிகளில் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

நாடாளுமன்றத்திலும் இந்தபிரசினைகளை தொடர்ந்து எழுப்புவோம். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பெரியஊழல்களையும் அதை வெட்கமில்லாமல் மூடிமறைக்கும் அரசையும் எதிர்த்து எங்கள் போராட்டத்தை தொடர்வோம என்றார் .

Leave a Reply