பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 54வது நினைவு_தினம் ஞாயிற்றுகிழமை அனுசரிக்கபட்டது.

இந்நிலையில் , ஜான்பாண்டியனை போலீஸார் கைது செய்துவிட்டதாக தகவல் பரவியது. இதைதொடர்ந்து , அக்கட்சியை

சேர்ந்த நூற்றுகணக்கானோர் பரமக்குடி ஐந்துசாலை சந்திப்பில் பகல் 12மணியளவில் சாலை_மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், சாலை_மறியலில் ஈடுபட்டவர்களை மறியலை கைவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் வாகனங்களுக்கு வழி விட மறுத்து, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது . இதைதொடர்ந்து , போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடிநடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினராம். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரின் வாகனங்கள், இருசக்கர வாகனங்களையும் அவர்கள் சேதபடுத்தினர்

கல் வீச்சில் போலீஸார் பலர் காயம் அடைந்தனர். நிலைமை கட்டுகடங்காமல் போகவே போலீஸார் கண்ணீர் புகைவீசினர். ஆனால், கலவரம் கட்டுபடவில்லை இதையடுத்து, போலீஸார் வானத்தை_நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், 3000 க்கும் அதிகமானோர் கலவரத்தில் ஈடுபட்டதால் கலவரத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Tags:

Leave a Reply