வெளிநாடடுவாழ் இந்தியர்கள், நம் நாட்டின் துாதர்களாக விளங்குகின்றனர். நம்நாட்டின் திறமையை உலகெங்கும், அவர்கள் பறை சாற்றி வருகின்றனர்.காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மறைந்த, ராஜிவ், ‘அரசு செலவிடும்,1 ரூபாயில், 15 காசுகள்தான், மக்களை சென்றடைகிறது. மீதமுள்ள, 85 காசுகள் கொள்ளையடிக்க படுகின்றன’ என, ஏற்கனவே குறிப்பிட்டார்.ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொழில் நுட்ப உதவியால், இந்த கொள்ளை தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

மானியங்கள், மக்களை முழுமை யாகவும், நேரடியா கவும் சென்றடையும் வகையில், வங்கிக்கணக்கு களில் பணத்தை செலுத்தும், நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 5.80 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், பழைய முறையையே பயன் படுத்தி யிருந்தால், 4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும்; அது தடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply