சேனல் 4 தொலைகாட்சி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கதலைவர் பிரபாகரன் தொடர்பான முக்கிய வீடியோவும் கிடைத்திருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட் டிருக்கிறது . அதில் மிககொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லபட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது .

இலங்கையின் கொலைக் களங்கள் எனும் பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி_கட்டத்தில் நடந்த போர் குற்றங்கள், படுகொலைகள் தொடர்பான ஆவணப்படங்களை சேனல் 4 ஒளிபரப்பிவந்தது .

இந்நிலையில் இலங்கையின் கொலைகளங்கள்: தண்டிக்கபடாத போர் குற்றங்கள் என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்துள்ளது.அதில் தான் பிரபாகரன் தொடர்பான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

Leave a Reply