ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீத முஸ்லிம்கள் இடம் பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில வெற்றியைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 70க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 32 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இதில் முஸ்லிம்கள் அதிகம்வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மண்டலத்தில் 25 பேரும், ஜம்முமண்டலத்தில் 6 பேரும், லடாக் மண்டலத்தில் ஒருவரும் போட்டி யிடுகின்றனர்.

இதுபோல் காஷ்மீர் மண்ட லத்தில் 4 காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் ஒரு சீக்கியரையும் லடாக் மண்டலத்தில் 3 புத்த மதத்தி னரையும் பாஜக களமிறக்கியுள்ளது. கடந்த பேரவை தேர்தலில் 24 முஸ்லிம்கள் பாஜக சார்பில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply