வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில், அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியா, பொருளாதார வலிமையில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி குரூப் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பு இரண்டு முறைகளில் கணக்கிடப்படுகிறது. அவற்றுள் ஒன்று வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில்

கணக்கிடப்படும் முறையாகும். இதனடிப்படையில் நம் நாட்டின் பொருளாதார (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மதிப்பு 4.45 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது ஆண்டிற்கு சராசரியாக 8.1 சதவீதம் வளர்ச்சி அடையும் நிலையில் 2050-ஆம் ஆண்டில் நம்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 85.97 லட்சம் கோடி டாலராக உயர்ந்து உலக அரங்கில் முதலிடத்தை பிடிக்கும். அப்போது சீனா 80.02 லட்சம் கோடி டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா (39.07 லட்சம் கோடி) மூன்றாவது இடத்திலும் இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply