மகாராஷ்டிர சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன இந்த நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக 4,000 மகள் மற்றும் மருமகன்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூர் தெற்குதொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் சுபாஷ் தேஷ்முக் தான் அந்த வேட்பாளர். அவர் எம்பியாகவும் இருந்துள்ளார்.

லோக் மங்கள் என்ற பெயரில், கடந்த 7 ஆண்டுகளாக சமூகநல நிகழ்ச்சிகளை சுபாஷ் நடத்திவருகிறார். இதன் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 2ஆயிரம் பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அவர்களுக்கு தேவையான திருமண உடைகள், சமையல்பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.5 ஆயிரம் பணமும் சுபாஷ் வழங்கிவருகிறார். இதுகுறித்து சுபாஷ் தேஷ்முக் கூறுகையில், " மகளுக்கு திருமணம் நடத்திமுடிப்பது என்பது ஒவ்வொரு தந்தைக்கும் பெருமைசேர்க்கும் விஷயமாகும். இதற்காக ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தை விற்பதை நான்கண்டேன். இதனை தடுத்து நிறுத்துவதுதான் எங்களது இலக்கு. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 2,000 பெண்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளோம்.என்றார்.

தான் திருமணசெய்து வைத்தவர்களை, தனது மகள் மற்றும் மருமகன்களாக சுபாஷ் கருதிவருகிறார். சுபாஷுக்கு ஆதரவாக அவர்கள் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4,000 பேர் நாள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதால், சோலாப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தன்னலம் கருதாமல் பல ஆண்டுகளாக சமூகசேவையில் சுபாஷ் தேக்முக் ஈடுபட்டுள்ளதால், கிராம மக்கள் அவருக்கு தங்களது பெரும் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால், சோலாப்பூர் தெற்குதொகுதியில் இவரின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது

Tags:

Leave a Reply