ஜெர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டு வரும் 'எலக்ட்ரானிக் விசா' வசதி வரும் 27ம் தேதி முதல் அறிமுகமாகவுள்ளது.

43 நாடுகளுக்கான இந்த 'இ-விசா' வசதியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர் துவங்கிவைக்க உள்ளனர்.

முதற்கட்டமாக, ரஷ்யா, தாய்லாந்து, பிரேசில், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,ஜோர்டான், உக்ரைன், நார்வே, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த இ-விசா வசதி அறிமுக மாகிறது. மெக்ஸிகோ, கென்யா மற்றும் பிஜி நாடுகளுக்கும் இந்தவசதியை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

எலக்ட்ரானிக் விசா வழங்குவதற்கான மென்பொருள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய 9 சர்வதேச விமான நிலையங்களிலும் இந்தவசதி வழங்கப்பட உள்ளது.

இ-விசாவை பெற அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப் பிக்கலாம். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படும். 96 மணி நேரத்திற்குள் இந்த விசா வழங்கப்படுகிறது.

எனினும், பாகிஸ்தான், ஆப்னகானிஸ்தான், சூடான், ஈரான், ஈராக், நைஜீரியா, இலங்கை மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கு தற்காலிகமாக இந்தசேவை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த நாடுகளுக்கும் இ-விசா வழங்கப்படவுள்ளது. இந்த வசதியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்தியாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்துக்கு 5 0 பது லட்சத்துக்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply