ஐஐடி. உள்ளிட்ட அரசுகல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு 4.5 % உள்ஒதுக்கீடு தருவதற்க்கான ஆணையை மத்திய அரசு_வெளியிட்டது. இந்த ஆணை செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விஷயத்தில் , எந்த வித ஆவணங்களும் இல்லாமல் அரசு மேல்முறையீடு செய்திருப்பது அதிருப்தி தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply