கல்வி , வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு_வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆந்திர உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை நிராகரித்துள்ளது .மதத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது. வேறு எந்த ஒரு தெளிவான அம்சமும் பரிசீலிக்கபடவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

இந்த விஷயத்தை மிகசாதாரணமாக மத்திய அரசு கையாள்கிறது என்றும் மதசிறுபான்மையினர் அனைவரும் ஒரே வகையான இன குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புசலுகை தேவைப்படும் அளவுக்கு மிக பிற்படுத்தபட்ட நிலையில் உள்ளார்கள் என்பதாகவோ நிரூபிக்க எந்த விதமான ஆதாரத்தையும் மத்திய அரசு சமர்ப்பிக்கவில்லை” என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர் .

Tags:

Leave a Reply