அரசியல் ஆதாயத்துக்காகவே, சர்வதேச யோகாதின நிகழ்ச்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என மத்திய அமைச்சர் ஸ்ரீபாத்நாயக் தெரிவித்தார்.

இந்திய யோகா சங்கம், ஆரோக்கிய பாரதி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு எஸ்-வியாசா பல்கலைக் கழகத்தின் உதவியுடன் சர்க்கரைநோய் எதிர்ப்பு இயக்கத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது.

சர்வதேச யோகாதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடைபெறும் இந்த பிரசாரத்தை, தில்லியில் சனிக் கிழமை தொடக்கிவைத்த மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பேசியதாவது:

யோகா தின நிகழ்ச்சிக்கான எதிர்ப்புகள் அடிப்படை யற்றதாகும். யோகா தினத்துக்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதில் 47 முஸ்லிம் நாடுகளும் அடங்கும். இந்தியாவில்செயல்படும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் யோகாதினத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்போது, இந்தியாவில் சிலர் எதிர்ப்பதற்கு அரசியல் ஆதாயம்தேட முயலுவதே காரணமாகும்.

யோகா தின நிகழ்ச்சிக்கான பொதுதிட்டத்தில், சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது. மேலும், நிகழ்ச்சியில் "ஓம்' என்ற வார்த்தையை உச்சரித்தாகவேண்டும் என்பது கட்டாயமில்லை. யாருக்கு விருப்பமோ, அவர்கள் உச்சரிக்கலாம். மற்றவர்கள் அவர்ளுக்குவிருப்பமான கடவுள்களின் பெயரை உச்சரிக்கலாம் என்றார் ஸ்ரீபாத் நாயக்.

Leave a Reply