ஏகே-47 துப்பாக்கியை அழுத்தும் விரலைவிட, வாக்குப்பதிவு இயந்திரத்தை அழுத்தும் விரல் வலிமையானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம், சம்பா நகரில் திங்கள் கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தும்விரலானது, ஏ.கே.-47 துப்பாக்கியில் உள்ள விசையை அழுத்தும் விரலைவிட வலிமையானது. இந்த மாநிலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் ஏகே-47 துப்பாக்கியின் சுமையை இப்போது உணர்கின்றனர்.

மாநிலத்தில் தந்தையும், மகனும் (ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா) நடத்திய ஆட்சியை நீங்கள் பார்த்தீர்கள். அவர்கள் உங்களுக்கு (மக்கள்) ஏதாவது செய்தார்களா? மாநிலத்தில் குடும்ப ஆட்சி தான் நடைபெற்றது. இப்போது ஜம்மு-காஷ்மீருக்கு நிலையான அரசு தேவை.

மாநிலத்தில் பெரும்பான்மை அரசு, பாஜக அரசு அமையவேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வளர்ச்சியும் தான் தேவை. அதை பாஜகவால் மட்டுமே அளிக்க முடியும் என்றார் மோடி.

Leave a Reply