தமிழகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைதிட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இந்ததிட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நெடுஞ்சாலை திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 5,000 கோடி. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்ததிட்டம் செயல்படுத்தப் படுகிறது.

ஈரோடு – கரூர் – திருச்சி மற்றும் சேலம் – கரூர் – திண்டுக்கல் ரயில் பாதைகளை மின்பாதையாக்கும் திட்டங்களையும் மோடி இன்று தொடங்கிவைத்தார். இதன் மூலம் ரயில்கள் செல்லும் பயணநேரம் குறையும்.

ஈரோடு – கரூர் – திருச்சி இடையே 300 கிலோ மீட்டர் ரயில்வே பாதை மின்மயமாக்கப் படுகிறது. இதே போன்று சேலம் – கரூர் – திண்டுக்கல் ரயில்வே பாதையும் மின் மயமாக்கப் படவுள்ளது. இதன் மொத்த நீளம் 300 கிலோ மீட்டர். ரூ. 321 கோடி மதிப்பீட்டில் இந்ததிட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மொத்தம் 26 முதல் 30 மாதங்களுக்குள்ளாக இந்த திட்டம் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணூர் திரவ எரிவாயு முனைய த்தையும் மோடி திறந்து வைத்துள்ளா. கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையும் மோடியால் திறந்து வைக்க பட்டுள்ளது.

Leave a Reply