பொருளாதாரத்தை பற்றி அடிப்படையே தெரியாமல் பாகிஸ்தானே பாருங்கள்!!! பங்காளதேஷை பாருங்கள் !!! என பொருளாதார மேதைபோல பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்..

மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க் பெர்முடா போன்ற மக்கள்தொகை குறைந்த நாடுகளுக்கு GDP மட்டுமே போதுமானது.. ஆனால், இந்தியாபோன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP per capita)யை கண்க்கில் கொள்ளாமலும், Nominal GDP புள்ளிவிவரத்தை கண்க்கில் கொள்ளாமலும் ( நுகர்வோர் செலவு, முதலீடு, அரசு செலவினம் மற்றும் நிகரஏற்றுமதிகள், பணவீக்கம் அனைத்தும் அடங்கும் ) , வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP)புள்ளிவிவரம் பற்றி மட்டுமே பேசுவது மிகவும்தவறான பொருளாதார வாதமாகும்.

சர்வதேச நாணய நிதியம் உலகபொருளாதார பார்வை (ஏப்ரல் -2019) தகவலின்படி அமெரிக்காவின் GDP 2.33% , ரஷ்யாவின் GDP 1.61%, UKவின் GDP 1.17% ஆனால் பாகிஸ்தானின் GDP 2.9%, பங்காளதேஷின் GDP 7.29%. அப்படியென்றால் பங்களாதேஷ் போன்ற நாடுகள் USA, சீனா, UK, ரஷ்யா, இந்தியா விட பொருளாதார சிறந்த நாடுகள் என சொன்னால் நாம் சிரிக்கமாட்டோமா?

சரியாகச் சொல்வதானால், GDPயின் வளர்ச்சி முற்றிலும் பயனற்ற புள்ளிவிவரம் அல்ல. ஒரு நாட்டின் மக்கள் தொகையை பொறுத்து முக்கியதுவம் பெறுகிறது.. ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேர்மறையான வளர்ச்சி இருக்கும் பல நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையானது என்பதையும், உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு நாடு எவ்வளவு முக்கியமானது என்பதையும், நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் போன்றவற்றையும் புரிந்துகொள்வது முக்கியம்.

இந்தியாவை தவிர மற்ற உலக நாடுகளெல்லாம் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை சமீபத்தில் வந்தது. Please take a loot at https://tinyurl.com/y5wfashq

இந்தியாவின் கடந்த மார்ச் 2018 ல் 2,015.228 அமெரிக்க டாலராக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மார்ச், 2019ல் 2,041.091 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது, இந்தியா எதிர்பார்த்த 7% வளர்ச்சி விகிதம் இப்போது 5% என்பது பின்னடைவு என்றாலும், இது நேர்மறை வளர்ச்சி என்பதில் ஐயாமில்லை.

Comments are closed.