நாடுமுழுவதும் வறுமை கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரி வாயு இணைப்பு வழங்கும் ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி, வரும் 1-ம் தேதி தொடக்கி வைக்கிறார்.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பலியா நகரில் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தில்லியில் வெள்ளிக் கிழமை கூறியதாவது:

 நாடுமுழுவதும் சமையல் எரிவாயு மானியத்தை இது வரை 1.13 கோடிப் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர்.
 தமிழகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீதம் பேர், எரி வாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதன்மூலமாக, சேமிக்கப்பட்ட ரூ.5,000 கோடி தொகை, ஏழைகளுக்கு இலவச சமையல் எரி வாயு இணைப்பு வழங்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

 நாடு முழுவதிலுமாக, 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச எரி வாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, வரும் 1-ம் தேதி, உத்தர பிரேதசத்தில் உள்ள பலியாவில் தொடக்கிவைக்கிறார். இந்த திட்டத்துக்காக, ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல்கட்டமாக, 1.5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

Tags:

Leave a Reply