சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறுகாணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய சட்டத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், இந்ததேர்தல்களில் பாஜக.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கதவறிய காங்கிரஸ் தலைமையை  குற்றம் சாட்டியுள்ளார்.

வலிமையான கூட்டணிக்கான உறவுகளை உருவாக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்ட காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தினருக்கான கட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நோயாளி மாநிலங்களாக நொடிந்துப்போய் கிடந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகியமாநிலங்கள் தற்போது வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

 

சமீபத்தில் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய மாநிலமான சத்தீஸ்கரில் நடைபெறும் பாஜக. அரசு நாட்டிற்கே முன்னோடியாக பலநலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக. ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றதாகவும், இந்த தேர்தலிலும் இம்மூன்று மாநிலங்களிலும் பாஜக. வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply