கூடங்குளம் அணுமின்_நிலைய எதிர்ப்பு போராட்டத்தினால் கடந்த 6 மாதங்களாக, தினமும் 5 கோடி ரூபாய் நஷ்டம்_ஏற்படுகிறது,” என்று இந்திய அணுமின்_கழக இயக்குனர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; கூடங்குளம் மின்_நிலையத்தின் முதல் யூனிட்டில், 99% பணிகள் முடிந்துவிட்டன.

உற்பத்தி தொடங்கும் நேரத்தில், போராட்டத்தின் மூலம் முட்டுகட்டை போடபட்டுள்ளது. இதனால், அணுமின் கழக_பணியாளர்களுக்கு, எந்த பணியும் இன்றி சம்பளம் தரும் வகையில் மட்டும், தினமும், 5 கோடி ரூபாய் நஷ்டம்_ஏற்படுகிறது. மாநில அரசின்_அனுமதி கிடைத்தால், முழு_ வீச்சில் பணிகளை தொடங்கி , 4 மாத காலத்தில், மின் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்தார்

Leave a Reply