தமிழகத்தில் 320 கிலோவோல்ட் திறன் கொண்ட ஜெனரேட்டர்களை நிறுவும் தொழில்_நிறுவனங்களுக்கு மானியதொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றா குறையில் இருந்து சிறு, குறு

மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் உற்பத்தியை தொடர்ந்து பெருக்குவதற்காக அந்தநிறுவனங்கள் நிறுவும் ஜெனரேட்டர்களுக்கு அதிகளவு மானியங்களை வழங்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் .

இப்போது பயன்படுத்தபட்டு வரும் 125 கிலோவோல்ட் திறன்கொண்ட ஜெனரேட்டர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் உற்பத்தியைத்தொடர்வதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் 320 கிலோ வோல்ட் திறன்வரை கொண்ட ஜெனரேட்டர்களை நிறுவவும், மானிய உச்சவரம்பினை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply