கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு அரசின் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி_நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய ஆயுதப் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-மத்திய ஆயுதப்போலீஸ் படையினர் தீவிரவாதிகள் ஒழிப்பு பணிகளில் நாடுமுழுவதும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் நலவாழ்வு உதவிகளின் ஒருபகுதியாக, இந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

சென்ற ஆண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். இடஒதுக்கீடு வழங்கபடுவது உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும் . தார்மீக பொறுப்பையும் அதிகரிக்க உதவும். என தெரிவித்தனர் .

தங்கள் உயிரை பணயம் வைத்து தேசத்தையே பாது காக்கும் இவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கிடு வழங்குவது என்பது இட ஒதுக்கிடு சட்டத்துக்கே ஒரு கௌரவம் ஆகும்

Leave a Reply