ஸ்ரீநகர் தீவிரவாதிகள் தாக்கியதில் 5 ராணுவவீரர்கள் பலி ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ்படை போலீசாரின் முகாமை தீவிரவாதிகள் தாக்கியதில் 5 ராணுவவீரர்கள் பலியாகினர். இதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள மத்திய ரிசர்வ்படை போலீஸ் முகாம் ஒன்றை தீவிரவாதிகள் தாக்கினர்.

இதில் 5 ராணுவவீரர்கள் பலியாகினர். இதையடுத்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு 4 தீவிரவாதிகள் இருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதைவ தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது . முகாமை தாக்கியபிறகு இரண்டு தீவிரவாதிகள் தப்பித்து விட்டனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்ததாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply