லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீனபடையினர், ‘இது சீனாவுக்கு சொந்தமான இடம்’ என அறிவிப்புபலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்துக்கு சவால் விடுத்துள்ளது .

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லடாக்பகுதியில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனபடையினர், முதலில் 10 கிமீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்டநிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம்வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சீனபடையினர் தற்போது லடாக்பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்து ள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply