பிரதமரிடம் நான் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரிடம் நான் 5ந்து கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பிரதமர் என்றமுறையில் அவரது பதவிக் காலத்தை வரலாறு எவ்வாறு மதிப்பிடும் என்று கருதுகிறார்? இப்போது வகிக்கும் பிரதமர்பதவியை விட நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றியது அதிக திருப்தி தந்ததா?

மன்மோகன்சிங் அரசு மிகவும் ஊழல் நிறைந்ததாக கருதப்படும் நிலையில், தாம் எங்கே தவறிழைத்தோம் என அவர் கருதுகிறார்? பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தமதுதவறு எங்கு நடைபெற்றது என்று நினைக்கிறார்? சி.பி.ஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நாடாளுமன்ற கூட்டுக் குழு போன்ற அமைப்புகளின் செயல்பாட்டை குலைத்தகுற்றத்தை அவர் ஏற்று கொள்கிறாரா? ஆகிய 5 கேள்விகளுக்கான பதிலை பிரதமரிடம் எதிர் பார்க்கிறேன் என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply