நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, குஜராத்தில் உள்ள வதோதராவில் போட்டியிடுகிறார். ஏற்கனவே, அவர் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல், உ.பி.,யின் மதுரா மக்களவைத் தொகுதியில் நடிகை ஹேமாமாலினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை டெல்லியில் நடைபெற்ற பாஜக மூத்த தலைவர்களின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பின்னர், இந்தவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 67 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply