வழக்கமான சமையல் எரிவாயு சிலிண்டரைப் போல, 5 கிலோ எரிவாயு எடை கொண்ட சிறிய சிலிண்டரையும் வாடிக்கையாளர்கள் மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எரிவாயு சிலிண்டர் விலை 400 ரூபாயை ஒட்டி விற்கப்படுகிறது. அதுவே, 5 கிலோ சிலிண்டர் 155 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை டெல்லியில் தொடங்கியிருப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர ப்ரதான் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகளில் 351 ரூபாய் என்ற சந்தை விலைக்கு இவை கிடைக்கும் நிலையில், எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களிடமும் இனி 5 கிலோ சிலிண்டர்களை மானிய விலையில் வாங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 14.2 கிலோ சிலிண்டர்களை மானிய விலையில் ஆண்டுக்கு பனிரெண்டு வரை பெறலாம் என்ற நிலையில், 5 கிலோ மானிய விலை சிலிண்டர்களை ஆண்டுக்கு 34 வரை பெறலாம் என்றும் தர்மேந்திர ப்ரதான் கூறினார்.

Tags:

Leave a Reply