அடுத்த சில ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.பொதுத் துறை வங்கிகளில் இளநிலை அதிகாரிகள் பணிக்கு அண்மையில் 10.50 லட்சம் பேர் தேர்வுகள் எழுதியுள்ள நிலையில், 50,000 எழுத்தர் பணிக்கு இம்மாதம் இறுதிக்குள் 44 லட்சம் பேர் தேர்வுகளை எதிர் நோக்கியுள்ளனர்.

பொது துறை வங்கிகள் உற்பத்தி திறனை அதிகரித்தல், செலவினங்களை கட்டுப்படுத்து தல் போன்ற காரணங்களை முன்னிட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராஜினாமா செய்தவர்களால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக, 2005-ஆம் ஆண்டில் ஒரு பணியாளரால் ஈட்டப்பட்ட வருவாய் ஆண் டுக்கு ரூ.3.80 கோடி என்ற அளவில் இருந்து 2010-11-ல் ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொது துறை வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்கள் 2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிளைகள் விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான ஆட்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற வர்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புதல் போன்றவற்றால் இந்திய வங்கித்துறை யில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என எர்னஸ்ட் அண்டு யங் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரியான என்.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ïனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடுத்த சில மாதங்களில் சுமார் 21,500 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி 10,500 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பணி ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை போல் இரண்டு மடங்கு என கூறப்படுகிறது.

எழுத்தர் பணிக்கு புதிதாக சேரும் ஒருவருக்கு பொதுத்துறை வங்கிகள் மாதம் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக ரூ.13,000 வழங்குகின்றன. அதேநேரத்தில் தனியார் வங்கிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 வரை அடிப்படை ஊதியமாக வழங்குகின்றன.

Tags:

Leave a Reply