உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

உ பி இந்தியாவிலேயே மிகபெரிய மாநிலமாகும். அங்கு 403 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. எனவே அந்தமாநிலத்தை நோக்கியே முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது . இதில் ஆட்சியை பிடிப்போம் என்று ராகுல் காந்தி வேறு காமடி செய்து கொண்டிருக்கிறார்.

403 உறுப்பினர் களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய_தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

117 உறுப்பினர் களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், 70 உறுப்பினர்களை_கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும் ஜனவரி 30ந் தேதி ஒரேகட்டமாக வாக்குபதிவு நடை பெறுகிறது. இந்தமாநிலங்களில் ஜனவரி 5ந் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும்.

60 உறுப்பினர் களை கொண்ட மணிப்பூர் சட்ட சபைக்கு ஜனவரி 28ந் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு_தாக்கல் ஜனவரி 4ந்_தேதி தொடங்குகிறது.

40 உறுப்பினர்களை_கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3ந் தேதி தேர்தல் நடைபெறும். இங்கு வேட்புமனு_தாக்கல் பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது

Tags; உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா , மாநில, சட்டசபை, தேர்தல், தேதி

Leave a Reply