கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிக்க 50 லட்சம் ஆகாஷ்-2 டாப்லட் கம்ப்ïட்டர்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை கோரி உள்ளது. நடப்பு 2012-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த கம்ப்ïட்டர்களை மாணவர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 1 லட்சம் ஆகாஷ்-1 கம்ப்ïட்டர்களை வாங்க டேட்டாவிண்ட் நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டு, இதுவரை 500 கம்ப்ïட்டர்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 50 லட்சம் ஆகாஷ்-2 கம்ப்ïட்டர்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.110 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள இந்த புதிய தலைமுறை கம்ப்ïட்டர்களில் அதிவேக புராஸசர்கள் பொருத்தப்பட்டிருக்கும். தொடுதிரை கொண்ட இந்த கம்ப்ïட்டர் ஒன்றின் விலை ரூ.2,300 என தெரிகிறது.

தேசிய கல்வி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி நிதியை மார்ச் மாதத்திற்குள் பயன்படுத்தும் வகையில் இந்த கம்ப்ïட்டர் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply