காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கான விளம்பரங்கள், தேர்தல்வியூகங்கள் வகுக்க, இமேஜ் பில்டபுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜப்பானைசேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ500 கோடிசெலவில் களம் இறக்கப்படுகிறதாம்.

லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபோகும் ராகுல்காந்தி இப்போதுதான் அரிச்சுவடியே படித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையிலிருந்து ராகுல் காந்தியை தேத்தவும் , இந்தியாவை வழி நடத்தப்போகும் ஒப்பற்ற தலைவர் என்ற மாயையை உருவாக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இதற்கான வியூகங்களை வகுத்துதருவதற்காக டென்ட்சு இந்தியா (Dentsu India) என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம்செய்துள்ளது.

இந்நிறுவனத்துடன் ரூ. 500 கோடிக்கு ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது . இந் நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசாரவாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல்பிரசார பயணம், மேடைபேச்சு ஆகியவற்றையும் கவனிக்குமாம்.

Leave a Reply