லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் யார்பிரதமராக ஆதரவு என்று ஜூனியர் விகடன் வாரம் இரு முறை கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நரேந்திரமோடி பிரதமராக தமிழகத்தில் 51% ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் சர்வே தெரிவித்துள்ளது . லோக் சபா

தேர்தல் முடிவுகள், யார் பிரதமராக ஆதரவு என்பது குறித்து மொத்தம் 25,247 பேரிடம் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இக்கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யார் பிரதமர் என்ற கேள்விக்கு மோடிக்கே அதிக ஆதரவு என்கிறது ஜூனியர் விகடன் சர்வே.

பா,ஜ,க.,வின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடிக்கு மொத்தம் 50.68% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 12,796 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று 25.71% பேரும் , ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 21.37% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply