5,400 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அனைத்தும் முற்றிலும் மூடப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; தற்போது இந்திய ரயில்வேயில் 5,400 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. அவை அனைத்தும் முற்றிலும் மூடப்படும் மாற்றுப்பாதைகள் அமைத்துத் தரப்படும்.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவுகூடங்கள் அமைத்துத் தரப்படும். ரயில்களில் உணவுகுறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத்தடுக்க மிகவும் பிரபலமான சமைத்து தயாராக இருக்கும் உணவுகள் ரயிலில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

Leave a Reply