கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில், நம் நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.54,000-ஆக உயர்ந்துள்ளது. இது, 2001-02-ஆம் நிதி ஆண்டில் ரூ.18,450-ஆக இருந்தது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், தற்போதைய விலை அடிப்படையில் கணக்கிடப்படும் தனிநபர் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 12.8 சதவீதம்

அதிகரித்துள்ளது என மத்திய ராஜாங்க அமைச்சர் (திட்டம்) அஸ்வினிகுமார் பாராளுமன்றத்தின் மேலவையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால் தனிநபர் ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது.

Tags:

Leave a Reply