சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 55 க்கும் அதிகமானோர் பலி சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடிவிபத்தில் 37க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் பலபேர் படுகாயங்களுடன், சிவகாசி, விருதுநகர், மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில் இயங்கும் ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை 400க்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு த‌யாரிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 40க்கும் அதிகமான அறைகளில், ஊழியர்கள் வேலைசெய்து வந்தனர்.

பட்டாசுகளில் மருந்து உட்செலுத்தும் பணி 40க்கும் மேற்பட்ட அறைகளில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, வெடி பொருட்கள் செலுத்தும்போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்தநிலையில், ‌பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து எல்லா அறைகளுக்கும் பரவியது. அது மட்டுமல்லாது, வெடி பொருட்கள் இருந்த அறைக்கும் தீபரவியது. தீவிபத்து கடுமையாக இருப்பதால், சுமார் ஒருகிலோ மீட்டர் அளவிற்கு அதன்பாதிப்பு இருப்பதால் அங்கு செல்லமுடியாத நிலை உள்ளது. இந்த வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 பேரை தாண்டும் என்று கூறப்படுகிறது.

Tags:

Leave a Reply