வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திரமோடிக்கு 56 சதவீத வாக்களர்களின் ஆதரவு இருப்பதாக அங்கே நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

.பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் யார் யாருக்கு ஆதரவு உள்ளது என்பது குறித்து இந்தியாடூடே சர்வே நடத்தியுள்ளது.

இதில் மொத்த வாக்காளர்களின் 56 சதவீதம்பேர் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது.

மாயாவதி தலைமையிலான பி.எஸ்.பி.,க்கு ஆதரவாக ஜாதவ்களும் காங்கிரசுக்கு ஆதரவாக முஸ்லிம்களும் பாரம்பரியமாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் மட்டும் இதில் விதி விலக்கு மற்ற பின் தங்கிய சமுகத்தை சேர்ந்தவர்களில் 78 சதவீத வாக்குகள் மோடிக்கே கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

வாரணாசியில் வசிக்கும் 77 சதவீத பிராமணர்கள், 80 சதவீத ராஜ் புத்துக்கள், 81 சதவீத வைஷ்யர்கள், 67 சதவீத பூமிகர்கள், 76 சதவீத உயர் வகுப்பினர், 65 சதவீத கும்ரிகோயரிகள் மற்றும் 53 சதவீத தலித்துகள் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதன்படி நரேந்திரமோடி 56 சதவீத வாக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 15 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்திலும், ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்திலும் இருப்பதாக அந்த கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

உ.பி.,யில் ஆளுங் கட்சியான சமஜ்வாடியின் வேட்பாளர் 4-வது இடத்திலும், மாயாவதியின் பிஎஸ்பி கட்சி வேட்பாளர் 5-வது இடத்திலும் இருப்பதாக அந்த கருத்துகணிப்பு மேலும் தெரிவிக்கிறது

Leave a Reply