வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் 2014ல் பாரதிய ஜனதா கட்சி "வெற்றிச்சபதம் ஏற்பு நாள்" ஆக 6.04.2014ல் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் எல்லா பூத் பொறுப்பாளர்களும் ஒருநாள் முழுவதும் பூத் வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களோடு

செலவழிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா முழுவதும் 5இலட்சம் பூத்தில் 2-3 கோடி வாக்காளர்களை நேரடியாக கட்சி தொடர்பு கொள்ள இயலும். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற செய்வதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சி ஒரே நாளில் மிக அதிக அளவிளான மக்களை தொடர்பு கொள்ள எடுத்த மிகப்பெரிய முயற்சியாக அமையும்.

நிகழ்சி விவரம்

A. பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள்;, 15-20 தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கள் வாக்கு சாவடிக்கு உட்பட்ட மக்களை திரட்டி வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.

B. இந்த நிகழ்ச்சியின் போது பேனர் கொடி போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால், அரசு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

C. பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள் குறைந்தது 30-40 வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மிகாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள விசயங்களை பின்பற்ற முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) பிரதம மந்திரியாக மோடி – ஏன் திரு. மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டுமென்று கலந்தாலோசிக்க வேண்டும்.

2) கட்சியைப் பற்றியும், தொகுதி வேட்பாளர் பற்றியும் மற்றும் கட்சியின் சின்னம் தாமரை என்பதை பற்றியும் விளக்கி சொல்ல வேண்டும்.

3) வாக்காளர்களை, 07820078200 என்ற நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கும் திரு. மோடி அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

4) முடிந்தால்;, வாக்காளர் அடையாள அட்டை எண் EPIC எண்னை 07820078200 என்ற எண்ணுக்கு எஸ்.எம்எஸ். அனுப்ப சொல்ல வேண்டும்.

வாக்காளர்களை தொடர்பு கொள்ளும் போது கட்சியை சேர்ந்த மகளிர் குறைந்த பட்சமாக 10 மகளிர் வாக்காளர்களின்; கையில் தாமரை சின்னத்தை மருதாணி கொண்டு வரைய வேண்டும். பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்களின் மொபைல் போனிற்கு திரு.மோடி அவர்களின் ஒரு சிறப்பு செய்தி, இந்த மக்கள் தொடர்பு நிகழ்சியின் போது வந்து சேரும்.

மதிய உணவிற்கு பிறகு எல்லா பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள் 50 அல்லது 60 ஆதரவாளர்களுடன் தொலைக்காட்சியின் மூலமாக திரு. மோடி அவர்களுடன் இணைந்து "வெற்றி சபதம்" மேற்கொள்ள வேண்டும். இதன் பிறகு அங்கிருந்து "தாமரை வெற்றி பாத யாத்திரை" மேற் கொள்ள வேண்டும். இதற்கான முன் அனுமதியினை அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த யாத்திரையின் போது எல்லோரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று எல்லா வாக்காளர்களையும் வலியுறுத்தி, கரண்டியால் தட்டினை தட்டி ஒலியெழுப்பிக்கொண்டு செல்ல வேண்டும்.

Tags:

Leave a Reply