நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகளை கடந்து வெற்றி வாகை சூடி உள்ளது. 6 மாநிலங்களில் அனைத்து தொகுதிகளையும் பாரதீய ஜனதா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

டெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. பாஜக.,வின் மூத்த தலைவர்கள் டாக்டர் ஹர்ச வர்தன், மீனாட்சிலேகி, மனோஜ் திவாரி உள்ளிட்ட ஏழுபேரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்கிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி (வதோதரா), மூத்த தலைவர் அத்வானி (காந்திநகர்) உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட மத்தியமந்திரிகள் சச்சின் பைலட், ஜிதேந்திரசிங், கிரிஜா வியாஸ் தோல்வியைத் தழுவி உள்ளனர். பா.ஜ.க விலிருந்து வெளியேறி சுயேச்சையாக பார்மர்தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் தோல்வி அடைந்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி உள்ளது. அங்கு ஹரித்துவார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாநில முதல்மந்திரி ஹரிஷ் ராவத்தின் மனைவி ரேணுகா ராவத் தோல்வியை தழுவினார். நைனிடால் தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி பகத் சிங்கோஷ்யாரி (பா.ஜனதா) வெற்றி பெற்றிருக்கிறார்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளையும், கோவாவில் உள்ள 2 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிவிட்டது. அந்த வகையில் இந்த 6 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 69 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

Tags:

Leave a Reply