இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடிவரை சீனா முதலீடுசெய்யலாம் எனத் தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்தியப் பயணத்தின் போது வெளியிடப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவில் கங்கையை தூய்மைபடுத்தும் திட்டம், அதிவேக ரயில்திட்டம் உள்ளிட்டவற்றில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம்கோடி (35 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்படும் என்று அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில், சீன அதிபர் ஜீஜின்பிங் வரும் 17ம் தேதி, இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது, இந்தியாவில் புல்லட் ரயில்திட்டம் போன்ற அதிவேக ரயில்திட்டங்கள், தொழில் பூங்காக்கள், குறிப்பிட்ட பகுதிகளில் ரயில்வேயை மேம்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், மும்பை-ஆமதாபாத் இடையேயான முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு, பெங்களுரூ-மும்பை இடையே அதிவேக ரயில் திட்டங்களை நிறைவேற்ற சீனா முன்னுரிமை தரலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply