திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் என, தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் தெரிவித்தனர் .

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் 5 ரகசிய அறைகள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி திறந்து பார்க்கப்பட்டன.

அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம்_கோடிக்கும் அதிகமான அரியபொற்குவியல் இருப்பது தெரியவந்தது. 6-து அறையை திறபதற்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த அறைகள் திறப்பு தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் என்கிற ஜோதிட நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்ன நிகழ்ச்சி கடந்த 8ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாவது திறக்கப்படாத 6வது பாதாள அறைகுள் செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உண்டு . எனவே இந்த அறையை எக்காரணத்தை கொண்டும் திறக்ககூடாது.

6வது அறையை திறந்தால், திறப்பவருககு விரைவில் மரணம் ஏற்படும். அறையை திறபபவரின் வம்சம் அழிந்துபோகும்.

அறையை திறப்பவரின்_குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துகளால் பாதிக்கபட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி_அமைதியான நிலை தொடர்ந்து காணபடும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது” என்று கூறினர்.

Leave a Reply