கடந்த இரண்டு நாளாக 19 மாநிலங்களில் வசித்து வரும் 60கோடி மக்களை மத்திய அரசு இருளில் தள்ளிவிட்டது என மோடி குற்றம்சுமத்தியுள்ளார்.

நாட்டின் வடக்கு, கிழக்கு , வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும்

மாநிலங்களுக்கு மின்சாரம் பகிர்ந்து தரும் , மின்தொகுப்புகளில், ஒரேநேரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் கடந்த இரண்டு தினங்களாக டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட , 19 மாநிலங்கள் இருளில்மூழ்கின. இதனால் மெட்ரோ ரயில் சேவை, முடங்கியது . இதனால் டில்லியில் கடும்போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

எது குறித்து நரேந்திர மோடி தெரிவித்ததாவது ; மத்திய அரசினுடைய தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்கனவே சாமான்யமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். விலைவாசி உயர்வு , கடும் பணவீக்கம் போன்ற பல பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்வு ‌என்னும் வடிவில் சாமான்ய ஏழை மக்களின் கையிலிருந்து பணத்தை பிடுங்கி ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு. இதுபோதா தென்று, இப்போது மின் வெட்டை ஏற்படுத்தி மக்களை இருளில் தள்ளி விட்டுள்ளது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த இரண்டு நாளாக 19 மாநிலங்களில் உள்ள சுமார் 60 கோடி மக்களை இருளில் தள்ளியுள்ளது என கடுமையாக தாக்கியுள்ளார்.

Leave a Reply