குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திரமோடி ஏப்ரல் 19ம் தேதி 600 மெகா வாட் திறன் மிக்க சூரிய மின் சக்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் .

குஜராத்தின் ரத்னாபுர் பகுதியில் அமைந்துள்ள சரங்கா கிராமத்தில் சோலார் பூங்கா உள்ளது . இந்த சோலார் பூங்காவில் ஏப்ரல் 19ம் தேதி

இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என குஜராத் மின்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந் நிகழ்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 20-21 தேதிகளில் இந்திய சோலார்_முதலீடு, தொழில் நுட்ப உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி காந்திநகரில் நடைபெறுகிறது . சோலார் சந்தைக்கான முதலீட்டு வாய்ப்புகள், சோலார் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, தொழில் நுட்ப மேம்பாடு , இந்திய சோலார்துறையின் எதிர் காலம் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது

Leave a Reply