மேட்டூர் புதிய அனல் மின்நிலையம் 608 மெகா வாட் மின் உற்பத்தி செய்து சாதனை மேட்டூர் புதிய அனல் மின்நிலையம் நேற்று 608 மெகா வாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் மின் நிலைய ஊழியர்கள் மகிழச்சியடைந்துள்ளனர் . மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ரூ.3500 கோடி மதிப்பிலான புதிய அனல் மின்நிலைய திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது .

இந்த பணிகள் தற்போது படிப்படியாக நிறைவடைந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்துவந்தது. இந்த நிலையில் நேற்று காலை 608 மெகாவாட் மின்உற்பத்தி செய்தது. இதையடுத்து மின் நிலைய ஊழியர்கள் மகிழச்சி அடைந்தனர். தற்போதைய நிலை யில் தமிழகத்தில் ‌கடுமையான மின் வெட்டு இருந்துவருகிறது. மேட்டூர் புதிய அனல் மின் நிலையம் 608 மெகா வாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் மின் வெட்டு பிரச்னைக்கு ஓரளவிற்கு தீர்வு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply