64வது பிறந்த தினத்தை முன்னிட்டு தனது தாயிடம்  ஆசிபெற்றார் மோடி குஜராத் முதல்வரும், பா,ஜ,க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இன்று தனது 64வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவர் தனது தாயை சந்தித்து ஆசிபெற்றார்.

நரேந்திரமோடியின் தாயான 94 வயதாகும் ஹிராபா தங்கியிருக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நரேந்திமோடி, தாயிடம் ஆசிபெற்றார்.

வாழ்கையில் மிகச்சிறந்த வாய்ப்புகளை பெறுவாய் என்று மோடியை வாழ்த்தினார் அவரது தாய். சிறிதுநேரம் தாயுடன் அமர்ந்து பேசிய மோடி, அக்கம்பக்கத்தினர் கூறிய வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply