பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, தாயாரிடம் ஆசி பெற்றார்.குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகைதரும் சீன அதிபரை வரவேற்பதற்காக அங்குசென்றுள்ள நரேந்திர மோடி, தனது 64-வது பிறந்த நாளான இன்று, காந்தி நகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.

தாயாரின் பாதங்களை தொட்டுவணங்கிய நரேந்திர மோடியை, அவரது தாயார் உச்சிமுகர்ந்து வாழ்த்தினார். பின்னர் மோடிக்கு தாயார் ஹீராபென், இனிப்பு வழங்கினார். பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நரேந்திர மோடி குஜராத்மாநிலம் வந்துள்ளதாலும், அகமதாபாத்திற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவுள்ளதாலும் அங்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply