மதசார்பற்ற கட்சி என்று கூறிக்கொண்டதை தவிர, கடந்த 65 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியினர், முஸ்லிம்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்

.மகாராஷ்டிராவில் மும்பையில் சிறுபான்மை சமூகத்தினருக்கான முன்னேற்றம்குறித்து பாஜக நடத்திய கூட்டத்தில் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கலந்துகொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். கூட்டதில் நஜ்மா பேசியதாவது: மதசார்பற்ற கட்சி என்று காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாக கூறிக்கொண்டு வந்துள்ளது. சிறுபான்மை மக்களிடையே மதசார்பற்ற கட்சி என்று வாதத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் ஏமாற்றிவந்துள்ளது. கடந்த 65 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.

அதிகாரத்தைமட்டுமே காங்கிரசார் விரும்பினார்களே ஒழிய, அதனால் மதக் கலவரங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. நான் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் ராஜ்ய சபா துணை தலைவராக இருந்தநான், இன்றைக்கு ஜனாதிபதியாக ஆகியிருப்பேன். ஆனால், மனநிம்மதியை இழந்திருப்பேன். நான் ஒரு காங்கிரஸ் குடும்பத்தில் தான் பிறந்தேன். நாட்டின் விடுதலைக்காக போராடியபோது இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. இதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன்.

முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி தந்தது . ஆனால் அதனை நிறைவேற்ற தவறிவிட்டது. சச்சார் கமிட்டியின் அறிக்கை மன்மோகன் சிங் அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சீனிமிட்டாயை கொடுத்து அவர்கள் மத்தியில் அனுதாபம்தேட முயன்றதை தவிர காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்காக என்ன செய்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply