தனது 68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திரமோடிக்கு அரசியல்  தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்….! 

பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார். தமது பிறந்த நாளான இன்று naraur கிராமத்திற்கு சென்று அங்குள்ள பழைமைவாய்ந்த சிவாலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் சுமார் 200 பள்ளி மாணவர்களுடன் தமது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். தாம் தத்தெடுத்த மூன்று கிராமத்தின் மக்களையும் குழந்தைகளையும் அவர் சந்திக்கஉள்ளார். மோடியின் வாழ்க்கையை சித்தரிக்கும் chalo jeete hain திரைப்படத்தையும் அவர் பார்க்கிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நாளை உரை நிகழ்த்த உள்ள மோடி, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமரை வரவேற்கும் வகையில் வாரணாசியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இதையடுத்து, பிரதமருக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியானது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாட்டுமக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக" தெரிவித்துள்ளார்.

Leave a Reply