அமெரிக்காவில்  குருத்வாராவில் மர்ம நபர்கள் நடத்திய  துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி அமெரிக்காவில், சீக்கிய கோயிலான குருத்வாராவில், மர்ம நபர்கள் இருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் துப்பாக்கி சூடு நடத்திய ஒருவன் உள்ளிட்ட 7 பேர் பலியாகியுள்ளனர் . இதனால் அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் விஸ் கோன்சின் மாகாணத்தில் உள்ள மில்வயூக்கி பகுதியில் சீக்கிய ‌கோயிலான குருத்வாரா உள்ளது. இந்த கோயிலில் நேற்று இருநபர்கள் துப்பாக்கியுடன் திடிரென்று புகுந்து அங்கிருந்தவர்களை சராமாரியாக சுட்டனர்.

இதில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இதற்க்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags:

Leave a Reply